தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தலையை அறுத்து காலி செய்துவிடுவோம்" - நெல்லையில் பெண் தாசில்தாருக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த வீடியோ! - பெண் தாசில்தார் தலையை அறுப்பேன்

Tirunelveli tahsildar: அம்பாசமுத்திரம் பகுதியில் பணியிட மாறுதல் செய்ததற்கு வட்டாட்சியரை கண்டித்து தலையாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வட்டாட்சியர் தலையை அறுத்து விடுவோம் என மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தாசில்தாருக்கு தலையாரி பகிரங்க மிரட்டல்
பெண் தாசில்தாருக்கு தலையாரி பகிரங்க மிரட்டல்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 5:44 PM IST

பெண் தாசில்தாருக்கு தலையாரி பகிரங்க மிரட்டல்

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் வட்டாட்சியராக பணிபுரிந்து வருபவர் சுமதி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக உமாபதி, முத்துக்குமார், முத்துராமலிங்கம், சுப்பிரமணியன் ஆகிய நான்கு தலையாரிகளை அருகே உள்ள பகுதிகளுக்கு இடம் மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதனைக் கண்டித்துக் கடந்த திங்கட்கிழமை மாலை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் தலையாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலையாரி சங்க மாநில செயலாளர் பிச்சி குட்டி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான தலையாரிகள் கலந்து கொண்டு வட்டாட்சியருக்கு எதிராகக் கண்டன உரையாற்றினர். அப்போது பேசிய தலையாரி சங்க மாவட்ட தலைவர் சீவலப்பேரி முருகன், வட்டாட்சியர் சுமதியைத் தரக்குறைவாகப் பேசியும், ”இட மாறுதலை ரத்து செய்யாவிட்டால் அவரது தலையை அறுத்து விடுவோம். எங்களைச் சீண்டாதே, உங்களது மரியாதையும், மானமும் கப்பல் ஏறிவிடும்” என்று பேசிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் வட்டாட்சியர் சுமதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இது குறித்து புகார் மனு அளித்துள்ளார். மேலும் தமிழ்நாடு வருவாய் துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் சுப்பு தலைமையில் வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனிடம் இந்த பிரச்சனை குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை சங்க மாநில செயலாலர் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், “அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் நிர்வாக நலன் கருதி 4 தலையாரிகளைப் பணி மாற்றம் செய்துள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலையாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். ஆர்ப்பாட்டம் நடத்த அவர்களுக்கு தார்மீக உரிமை உண்டு. ஆனால் ஆர்ப்பாட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்களையும் அநாகரிகமான முறையில் தலையை அறுத்து விடுவேன் என முருகன் என்ற கிராம உதவியாளர் கூறியுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார்.

வழக்கமாக அரசியல் மேடைகளில் தான் இது போன்று அநாகரீகமாக பேசும் சம்பவங்கள் நடைபெறும். ஆனால் நெல்லையில் அரசு பணியில் இருக்கும் நபர் பெண் அதிகாரியின் தலையை அறுப்பேன் என்று பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் சக அரசு அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:“விளையாட்டில் சாதி, மதம் தலையிடக் கூடாது” - வைகோ கருத்து!

ABOUT THE AUTHOR

...view details