திருநெல்வேலி:நடிகர் விஜய்யின் 47 வது பிறந்த நாள் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட விஜய் மக்கள் இயக்க இணையதள அணியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், கரோனோ பெருந்தொற்று காலத்தில் வீடுகளுக்கு உணவு கொண்டு செல்லும் சோமோட்டோ ஊழியர்கள் 100 பேருக்கு இலவசமாக தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்க முடிவு செய்தனர்.
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கிய விஜய் ரசிகர்கள் - Tirunelveli district news in tamil
உணவு டெலிவரி ஊழியர்கள் 100 பேருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி நடிகர் விஜயின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.
உணவு டெலிவரி ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கிய விஜய் ரசிகர்கள்
அதன்படி, இன்று நெல்லை வண்ணாரபேட்டையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு சொமோட்டோ ஊழியர்கள் 100 பேர் டோக்கன் கொடுத்து அழைத்து வரப்பட்டனர். ஊழியர்கள் ஒவ்வொருவராக தலா ஒரு லிட்டர் பெட்ரோலை தங்களது வாகனங்களில் நிரப்பிக் கொண்டனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக லட்டு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:சிங்கிள் ட்விட்டில் சிம்பு ரசிகர்கள் ஹேப்பி!