திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஞானதிரவியம், ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 589 வாக்குகள் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவின் பால் மனோஜ் பாண்டியனை (3,36,070 வாக்குகள்) விட ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 519 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
'வெற்றியை ஸ்டாலின் காலடியில் சமர்ப்பிக்கிறேன்' - ஞானதிரவியம்! - certificate
நெல்லை: ஸ்டாலின் காலடியில் இந்த வெற்றி சான்றிதழை சமர்பிப்பதாக நெல்லை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஞானதிரவியம் தெரிவித்துள்ளார்.
ஞானதிரவியம்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்களித்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த வெற்றி சான்றிதழை ஸ்டாலின் காலடியில் சமர்பிக்கிறேன். திருநெல்வேலி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவேன்" என்றார்.