தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'நாங்குநேரி-விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு' - திருமாவளவன் - Stalin

நெல்லை: நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.

vck-dmk

By

Published : Sep 5, 2019, 1:45 PM IST

Updated : Sep 5, 2019, 3:23 PM IST

சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 148ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நெல்லை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள வ.உ.சி. மணி மண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், இந்த இரண்டு தொகுதிகளிலும் திமுகவை வெற்றிபெறச் செய்ய வைப்பது தங்களுடைய தலையாய கடமை எனவும் தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தல்களில் திமுகவை மக்கள் ஆதரித்துள்ளது போல வரும் தேர்தல்களிலும் ஆதரவளிப்பார்கள் என்றார். மேலும், வரும் தேர்தலிலும் திமுகவிற்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

திமுக-விசிக கூட்டணி

தொழில் துறையில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கியுள்ளதாகவும், தொழில் துறையில் இதுவரை போடப்பட்ட ஒப்பந்தங்களால் எந்த பலனுமில்லை என்றும் கூறினார். முதலமைச்சரின் வெளிநாடு பயணம் மூலம் கிடைக்கும் முதலீட்டால் தமிழ்நாடு பயன்பெறும் என்றால் அதனை வரவேற்பது தங்களது கடமை என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.

Last Updated : Sep 5, 2019, 3:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details