நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 27ஆவது பட்டமளிப்பு விழா இன்று தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், நீதியரசர் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் 752 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்.
முனைவர் பட்டம் பெற்றார் எம்.பி. திருமாவளவன் - thirumavalavan got doctorate degree from the governor
நெல்லை: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி. தொல்.திருமாவளவன் முனைவர் பட்டம் பெற்றார்.
நெல்லை
இதில் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், 'இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் உயர்கல்வியில் தமிழ்நாடு முதன்மை இடத்தில் இருக்கிறது. இந்திய அளவில் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை 25.4 விழுக்காடு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அது 48.2 விழுக்காடாக உள்ளது' என தெரிவித்தார்.