தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஆட்சிமாற்றத்திற்கான அச்சாணி இந்த இடைத்தேர்தல்’ - வைகோ - naanguneri vaiko piracharam

திருநெல்வேலி: நாங்குநேரி,விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அடுத்து வரும் ஆட்சி மாற்றத்திற்கான அச்சாணியாக அமையும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko by election campaign

By

Published : Oct 13, 2019, 2:39 PM IST

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், “நாங்குநேரியில் பல்வேறு பிரச்னைகள் உள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்னையால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டை அழிக்கும் நோக்கில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தீட்டி வருகின்றது. அதை எதிர்க்க வேண்டிய தமிழ்நாடு அரசோ எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் மவுனம் சாதித்துவருகிறது. இதில் இருந்து நாம் விடுபட வேண்டும் என்றால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் வரவேண்டும்.

வைகோ பரப்புரை

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 39 இடங்களில் 38 இடங்களில் வெற்றி பெற்று பலமான கட்சியாக அமைந்தது. அதேபோல் இந்த தேர்தலிலும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டிப்பாக வெற்றிபெறும். இது அடுத்த ஆட்சி மாற்றத்திற்கான ஒரு அச்சாணியாக அமையும்” என்றார்.

இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் தலைவர்கள் சந்திப்பு: நன்றி தெரிவித்த முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details