திருநெல்வேலி:அரசு.அமல்ராஜ் எழுதிய "ஓர்மைகள் மறக்குமோ" (மாஞ்சோலை வாழ்வியலும் வரலாறும்) என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று (அக்.1) நெல்லை பாளையங்கோட்டை நேருஜி சிறுவர் கலையரங்கில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். கவிஞர் விசாலி கண்ணதாசன், முன்னாள் சட்டப்பேரவை தலைவர் ஆவுடையப்பன், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூ மணி ஆகியோர் கலந்து கொண்டு புத்தகத்தை பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து விழாவில் வைகோ பேசுகையில், "தமிழக மக்களின் நினைவுகள் அசைபோடும் வகையில் பல்வேறு பாடல்களைத் தந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவரது மகள் இந்த நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் என்பது எளிமையான வழி இல்லை. கரடு முரடான துன்பம் சூழ்ந்த பாதையே அரசியல். அதில் எடுத்த முடிவில் உறுதியோடு பயணிப்பவர்களில் இந்த நூலின் ஆசிரியரும் ஒருவர்.
இந்திய விடுதலைக்கு முன்பு அடர்ந்த வனப் பகுதியாக திகழ்ந்த மாஞ்சோலை மக்களின் கடுமையான உழைப்பால் சிறந்த தேயிலை கேந்திரமாக உருவெடுத்தது. தமிழும், மலையாளமும் பேசும் மக்கள் வாழ்ந்தாலும், சாதி சமய பேதமற்ற சமத்துவம் நிறைந்த ஊராக திகழ்ந்து வருகிறது.
இதையும் படிங்க:மாற்றுத்திறனாளி வாகனத்தை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகை மறுப்பா? - ஈரோடு பெண் கண்ணீர் மல்க கோரிக்கை!