திருநெல்வேலி:மதிமுக சட்டத்துறை செயலாளர் அரசு அமல்ராஜ் இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "பெரியார், அண்ணாவின் எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக திமுக செயல்படுகிறது. பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆதிச்சநல்லூர் சிவகளை தமிழர்களின் நாகரீகம் தொன்மையானது. அதற்காக பொருநை அருங்காட்சியகம் அமைக்க அரசு அறிவித்ததற்கு பாண்டிய நாட்டு மக்கள் நன்றி கடன்பட்டிருக்கிறோம். கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பான முதலமைச்சரின் கேள்விக்கு எதிர்க்கட்சி பதில் அளிக்க முடியாமல் உள்ளது.