திருநெல்வேலி மாவட்டம் உவரியில் பிரசித்தி பெற்ற சுயம்புலிங்க சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்நிலையில் இந்த ஆண்டு கரோனோ காரணம் காட்டி திருவிழாவை எளிமையாக நடத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்ததாக கூறப்பட்டது.
இதை கேள்விப்பட்டு விழாவை வழக்கம்போல் கொடியேற்றி நடத்த வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பான வி.ஹெச்.பி மாநில தலைவர் பெரியகுலைகாதார் தலைமையில் ஊர் மக்கள் கோயில் முன்பு நேற்றிரவு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மேலும் கொடியேற்றாவிட்டால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தனர்.