தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேட்பாரற்று கிடந்த மூதாட்டி: வீட்டில் ஒப்படைத்த மாநகராட்சி ஆணையர்! - மூதாட்டி மீட்பு

திருநெல்வேலி: பேருந்து நிறுத்தத்தில் கேட்பாரற்று கிடந்த மூதாட்டியை மீட்ட மாநகராட்சி ஆணையர் அவரது இல்லத்தில் ஒப்படைத்தார்.

Unheard old lady: Corporation commissioner handed over at home!
Unheard old lady: Corporation commissioner handed over at home!

By

Published : May 11, 2021, 9:40 PM IST

கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட முதியவர்கள் ஆதரவின்றியும், தேவையான உணவு கிடைக்காமலும் சாலையோரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், திருநெல்வேலி மாநகர் என்ஜிஓ காலனி பேருந்து நிலையம் முன்பாக ஆதரவற்ற நிலையில் ஒரு மூதாட்டி இருப்பதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் கண்ணன் நேரில் சென்று மூதாட்டியைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில் மூதாட்டி சுத்தமல்லி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் தனது பேரன் வீட்டில் தங்கி இருந்ததாகவும், தற்போது ஊரடங்கு காலத்தில் உணவு கிடைக்காமல் இங்கே வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு கொண்டு விடுவதற்கான பணிகளை உடனே செய்ய மாநகராட்சி ஆணையாளர், தன்னார்வலர் சரவணனிடம் தெரிவித்தார்.

அதன்படி மாநகராட்சியுடன் இணைந்து ஆதரவற்றோர் பாதுகாப்பு இல்லங்கள் நடத்தி வரும் தன்னார்வலர் சரவணன், தனது குழுவினருடன் வந்து மூதாட்டியை உடனடியாக பாதுகாப்பாக அழைத்துச் சென்று சுத்தமல்லியிலுள்ள அவரது வீட்டில் சேர்த்தார். மேலும் அவருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான பலசரக்கு மற்றும் உணவுத் தேவைக்கான பொருள்களையும் வழங்கினார்.

உதவி செய்ய கூட மற்றவர்கள் வர முடியாத இந்த ஊரடங்கு காலத்தில் இவர்களை மீட்பதற்கான பணிகள் இன்று முதல் தொடங்குகிறது என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details