திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர், கடந்த 23ஆம் தேதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்கு தொடர்பாக திருநெல்வேலி மாநகர காவல்துறை தனிப்படை அமைத்து திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார். இதனையடுத்து சிபிசிஐடி இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மேற்கொண்டது.
உமா மகேஸ்வரி கொலை வழக்கு - கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜர்!
திருநெல்வேலி: முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கார்த்திகேயன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கார்த்திகேயனை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டது. ஐந்து நாட்கள் அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி. திருநெல்வேலி குற்றவியல் நீதித்துறை நடுவர் செல்வம் முன்பு கார்த்திகேயனைஆஜர்படுத்தி மீண்டும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
கார்த்திகேயனிடம் சிபிசிஐடி விசாரணையை முடித்திருக்கும் நிலையில், அவரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக சீனியம்மாள் உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. விரைவில் பலரிடமும் சிபிசிஐடி அடுத்தகட்ட விசாரணையை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.