தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆட்சிக்கு வந்து ரெண்டு வருஷமாகியும் எந்த லாபமும் கிடைக்கல' - ஆர்எஸ் பாரதி சர்ச்சை பேச்சு! - ஆட்சிக்கு வந்து எந்த லாபமும் இல்லை

நெல்லையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆர்.எஸ்.பாரதி, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த லாபமும் கிடைக்கவில்லை என்றும், கட்சிக்கு ஒன்று என்றால் தொண்டன்தான் வருவான் பதவியில் உள்ளவன் வரமாட்டான் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Two years after dmk coming to power there is no profit RS Bharathi speech in Tirunelveli created Controversy
ஆட்சிக்கு வந்து இரண்டு வருஷமாகியும் எந்த லாபமும் கிடைக்கல; ஆர்எஸ் பாரதியின் பேச்சால் சர்ச்சை

By

Published : Jul 4, 2023, 8:09 AM IST

Updated : Jul 4, 2023, 8:36 AM IST

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

திருநெல்வேலி:நெல்லை மாநகர திமுக சார்பில் திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சி டவுனில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தலைமை கழகப் பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நெல்லையைச் சேர்ந்த திமுக மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிளி மற்றும் கருணாநிதி உருவச் சிலை ஆகியவற்றை வழங்கி கௌரவித்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது, “திமுகவுக்கு இன்று எவன் எவனெல்லாம் சவால் விடுகிறான். நேற்று கூட அண்ணாமலை ஒரு சவால் விடுகிறான். திமுக சாதாரணமாக உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. கடந்த 75 ஆண்டுகளாக கட்சியின் தொண்டன் அனுபவித்த துன்பங்களைப் போன்று இந்தியாவில் வேறு எந்த கட்சி தொண்டர்களும் அனுபவித்து இருக்க முடியாது.

ஒவ்வொரு தொண்டனும் கொதித்து எழுவான். அதனால்தான் யார் நினைத்தாலும் திமுகவை அழிக்க முடியவில்லை. மோடி அரசு திமுகவை அழிக்க வேண்டும் என்று கருதுகிறது. புதிய புதிய சட்டம் கொண்டு வருகிறார்கள். இந்த மண்டபத்தில் வைத்து சொல்கிறேன், திமுகவின் கால் செருப்பைக் கூட எவராலும் தொட்டுவிட முடியாது.

மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள். இங்கு ஒரு ஆளுநர் இருக்கிறார். அவர் எங்காவது வேறு தொழிலுக்கு செல்லலாம். தமிழ்நாட்டில் அவர் முதலமைச்சருக்கு நோட்டீஸ் கொடுக்கிறார். ஆனால், நான்கு மணி நேரத்தில் அந்த நோட்டீஸ் வாபஸ் பெறப்படுகிறது. இன்னும் ஒன்றை நான் பச்சையாக சொல்கிறேன். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், தற்போது வரை ஆளுங்கட்சி என்ற உணர்வு எங்களுக்கு இல்லை. அந்த அளவுக்கு கட்சித் தொண்டர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.

அதிமுக ஊரை அடித்து உலையில் போட்டு கோடி கோடியாக சேர்த்துள்ளனர். ஆனால், எங்கள் கட்சியினர் 10 ஆண்டுகளாக சிறைக்கு சென்றார்கள். ஆட்சி வந்தது, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு எந்த வித லாபமும் கிடைக்கவில்லை.

ஆனால், தொண்டர்கள் சோர்ந்து போகவில்லை. தலைவர் ஒரு அறிக்கை விட்டவுடன் முதலாக வந்து நிற்பது தொண்டன்தானே தவிர, பதவியில் இருப்பவர்கள் இல்லை” என்று ஆவேசமாக பேசினார். இவ்வாறு மூத்த அரசியல்வாதியாக இருந்து கொண்டு தங்களுக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை என ஆர்.எஸ்.பாரதி பேசியது பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குஷ்பூ குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Last Updated : Jul 4, 2023, 8:36 AM IST

ABOUT THE AUTHOR

...view details