திருநெல்வேலி:பேட்டையை அடுத்த சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் பிரபு (35). திருநங்கையான இவர் நேற்று (டிச.17) அதிகாலை பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலை நான்கு வழிச்சாலையில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து பெருமாள்புரம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த மருத்துவமனைக்குச் சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது பிரபு கூறும்போது, “நான் திருநங்கையாக மாறி யாசகம் எடுத்து பிழைத்து வருகிறேன். தினமும் சுத்தமல்லியில் இருந்து புறப்பட்டு நாங்குநேரி டோல்கேட் சென்று, அங்கு வரும் வாகனங்களில் பணம் வசூல் செய்வேன். இந்த நிலையில் 16ஆம் தேதி டோல்கேட் பகுதியில் நின்றுகொண்டிருக்கும்போது லாரியில் வந்த இரண்டு பேர் என்னை அழைத்தனர்.