தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - இரண்டு பேர் உயிரிழப்பு! - லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

நெல்லை : அம்பாசமுத்திரம் அருகே மாஞ்சோலை மலைச்சாலையில், மின்வாரிய ஒப்பந்தப் பணிகளுக்காக பணியாளர்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர் .

லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து -  இரண்டு பேர் பலி!!
லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - இரண்டு பேர் பலி!!

By

Published : May 22, 2021, 10:50 AM IST

கோதையாறு பகுதியில் 60 மற்றும், 40 மெகவாட் திறன் கொண்ட இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து சங்கர்நகருக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின்கோபுரங்கள் சுமார் 60 ஆண்டுகள் பழமையானதால், புதிதாக மின்கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோபுரம் அமைக்கும் பணி முடிவடைந்ததையடுத்து பழைய மின்கோபுரத்தில் உள்ள இரும்பு கம்பிகளை அகற்றுவதற்காக வெள்ளிக்கிழமை காலை 30க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் லாரியில் சென்றனர்.

மூலச்சியைச் சேர்ந்தவர் பெருமாள்(30) லாரியை ஓட்டி வந்தார். நேற்று (மே.22) மாலையில் பழைய மின்கம்பிகளையும், பணியாளர்களையும் ஏற்றிக் கொண்டு லாரி திரும்பிக் கொண்டிருந்து. அப்போது, மலைச்சாலையில் மூனு முடங்கி என்ற இடத்தில் வரும் போது திடீரென கட்டுபாட்டை இழந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், லாரியில் உள்ள பணியாளர்கள் மீது இரும்புக் கம்பிகள் விழுந்ததோடு பணியாளர்கள் பள்ளத்தில் விழுந்தனர். இதில் ஓட்டுநர் பெருமாள், உள்பட 29 பேர் காயமடைந்தனர். இரண்டு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், கல்லிடைக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் முருகேசன், காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து கல்லிடைக்குறிச்சி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கடை உரிமையாளரை கட்டி போட்டு ரூ.50 லட்சம் கொள்ளை!

ABOUT THE AUTHOR

...view details