திருநெல்வேலிமாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 10 நாட்களுக்கு முன்பாகவே குடும்பத்தினருடன் வருகை தரும் பக்தர்கள், குடில்கள் அமைத்து தங்கி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காரணமாகப்பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் 30ஆம் தேதி வரை அரசுப்பேருந்துகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த உறவினர்களான சரவணன், விஷ்ணு குமார் ஆகியோர் குடும்பத்துடன் இன்று காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு வந்துள்ளனர். அப்போது சரவணனின் 8 வயது மகனும், விஷ்ணு குமாரின் 10 வயது மகனும் கோயிலுக்கு எதிரே உள்ள ஆற்றின் ஓரம் நின்று கொண்டிருந்தனர்.