தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 27, 2022, 9:54 AM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 2 பாஜக தலைவர்கள்... கே.எஸ் அழகிரி விமர்சனம்...

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு அண்ணாமலை, ஆளுநர் என்று 2 மாநில தலைவர்கள் உள்ளதாகவும், அண்ணாமலையை விட ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பாக செயல்படுவதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் ஆளுநரையும் சேர்த்து இரண்டு பாஜக தலைவர்கள்...நெல்லையில் கே.எஸ்.அழகிரி பேட்டி
தமிழ்நாட்டில் ஆளுநரையும் சேர்த்து இரண்டு பாஜக தலைவர்கள்...நெல்லையில் கே.எஸ்.அழகிரி பேட்டி

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத்தி பாதயாத்திரை செய்ய உள்ளார். இதனை தமிழ்நாட்டில் இருந்து அடுத்த மாதம் 7ஆம் தேதி தொடங்குகிறார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர், "அதிகாரத்தில் இல்லாததால் காங்கிரஸ் வலுவிழந்து விட்டதாக அர்த்தம் இல்லை. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு மாநில தலைவர்கள் இருக்கிறார்கள். ஒன்று அண்ணாமலை மற்றொன்று ஆளுநர் ஆர்.என். ரவி. அண்ணாமலை விளம்பரத்திற்காக எதையும் செய்யக்கூடியவர். அண்ணாமலையை விட ஆளுநர் சிறப்பாக செயல்படுகிறார்.

தமிழ்நாட்டில் 2 பாஜக தலைவர்கள்

குலாம் நபி ஆசாத் போன்ற தலைவர்கள் கட்சியிலிருந்து விலகி செல்வதால் காங்கிரஸ் கட்சி சுத்தமடைந்து கொண்டிருக்கிறது. வரும் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நான்கு நாட்கள் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியில் தலைவர்கள் இல்லை என்ற கருத்து தவறானது. சோனியா காந்தியே கட்சியின் தலைவராக இருக்கிறார்" என்றார்.

இதையும் படிங்க:பாஜகவுக்கும் நாட்டின் சுதந்திரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.. கே.எஸ்.அழகிரி

ABOUT THE AUTHOR

...view details