திருநெல்வேலி மாவட்டம் சி. என். கிராமப்பகுதியில் வசிப்பவர்கள் உடையார், சூரியமூர்த்தி. இவர்கள், இருவரும் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி அருகே சாராயம் விற்க முயன்ற இருவர் கைது - திருநெல்வேலி அண்மைச் செய்திகள்
திருநெல்வேலியில் வீட்டிலேயே சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முயன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
![திருநெல்வேலி அருகே சாராயம் விற்க முயன்ற இருவர் கைது திருநெல்வேலி அருகே சாராயம் விற்க முயன்ற இருவர் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11882507-thumbnail-3x2-sarayam.jpg)
திருநெல்வேலி அருகே சாராயம் விற்க முயன்ற இருவர் கைது
அப்போது, இருவரும் வீட்டிற்குள்ளேயே சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து, காவலர்களைக் கண்டதும் தப்ப முயன்ற அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : அவதூறு பரப்பும் ஹெச்.ராஜாவை கைது செய்ய வலியுறுத்தும் திருமா