தமிழ்நாடு

tamil nadu

பாளையங்கோட்டை மத்திய சிறையில் 2 கைதிகளுக்கு கரோனா தொற்று

By

Published : May 28, 2020, 1:04 PM IST

திருநெல்வேலி: பாளையங்கோட்டை மத்திய சிறையில் சென்னை சென்று வந்த கைதிகள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை மத்திய சிறை
பாளையங்கோட்டை மத்திய சிறை

திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விசாரணை கைதிகள், தண்டனைக் கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இந்நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து கடந்த மார்ச் மாதம் தண்டனை சிறைவாசிகளில் நன்னடத்தை பட்டியலில் உள்ள ஐந்து பேர் பணி நிமித்தமாகவும், கணினி பயிற்சிக்காவும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு பயிற்சி முடித்த பின், கரோனா ஊரடங்கு காரணமாக நெல்லைக்கு வரமுடியாத நிலையில் இருந்தனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டதால், சென்னையில் இருந்து அனுமதி பெற்று ஐந்து சிறைவாசிகளும் கடந்த சில தினங்களுக்கு முன் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு வந்தனர்.

இவர்கள் ஐந்து பேரும் சென்னையில் இருந்து வந்ததால் சிறையிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கரோனா தொற்று பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரண்டு சிறை வாசிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, சிறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: புழல் மத்திய சிறையில் கைதி தற்கொலை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details