Headmaster Suspended: திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தலைமையாசிரியர் ஜெபா என்ற கிறிஸ்தோபர் ஜெயக்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அப்பள்ளிக்கான நிர்வாக மேலாளர் புஷ்பராஜ், அந்த தலைமையாசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்தப் புகாரில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்ற ஓர் சூழலில், திருநெல்வேலி மாவட்டத்தில் தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:Covid 19 case increases in chennai: சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று