தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் - fire day event

பாளையங்கோட்டையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்
உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்

By

Published : Apr 14, 2021, 6:28 PM IST

திருநெல்வேலி : நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணியின்போது உயிர் நீத்த வீரர்களின் நினைவாக நீத்தார் நினைவு தின நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது.

உயிர்நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்

இந்நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர் சத்திய குமார் தலைமையில் பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுதொடர்ந்து, பாளையங்கோட்டை நிலையத்திலுள்ள 48 ஊழியர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் ’’ 1944ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற வெடி விபத்தில் பலியான தீயணைப்புப் படை வீரர்களின் நினைவாக இந்த நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சி கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் இன்று (ஏப்ரல் 14) தேதி நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சி மத்திய அரசு மூலம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மேலும், மரணமடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதனை, கடைப்பிடிக்கும் விதமாக ஒரு வார காலத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பில் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும்” என்றனர்.

திருநெல்வேலியில் உள்ள 7 தீயணைப்பு நிலையங்களிலும் மற்றும் கரோனா பரவி வரும் இந்த காலகட்டத்தில் மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மருத்துவமனைகளிலும் உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தரம் தாழ்ந்த அரசியல் செய்கிறது பாஜக' - திருமாவளவன் தாக்கு

ABOUT THE AUTHOR

...view details