நெல்லை மாநகர காவல் துறையின் வெடிகுண்டு சோதனை பிரிவில் பயன்படுத்தப்பட்டு வந்த பிராவோ என்கின்ற நாய் வயது மூப்பு காரணமாக நேற்று (ஏப்ரல் 15) உயிரிழந்தது. இதையடுத்து, நாயை மாநகர காவலர்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்தனர். அதன்படி நாய்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி 30 குண்டுகள் முழங்க மாநகர காவல் துணை ஆணையர்கள் சீனிவாசன் மற்றும் மகேஷ் குமார் ஆகியோர் தலைமையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
30 குண்டுகள் முழங்க மோப்ப நாய்க்கு மரியாதை - துணை ஆணையர் சீனிவாசன் பெருமிதம் - துணை ஆணையர் சீனிவாசன் பெருமிதம்
நெல்லையில் 30 குண்டுகள் முழங்க மோப்ப நாய்க்கு மரியாதை செலுத்தி துணை ஆணையர் சீனிவாசன் பெருமிதமடைந்தார்.
இதுகுறித்து நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாசனை கூறுகையில், ’’வெடிகுண்டு பிரிவில் பணியாற்றும் மோப்ப நாய்களுக்கு அரசு மரியாதை செய்யப்படுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், இந்த நாய் பல சாதனையை படைத்துள்ளது. அந்த வகையில், இறந்த பிராவோ நாய்க்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது’’ என்றார்.
இதையும் படிங்க: கொடியங்குளம் கலவரம்: 'கர்ப்பிணிப் பெண்ணை பூட்ஸ் காலால் உதைச்சாங்க' - பத்திரிக்கையாளரின் நேரடி சாட்சியங்கள்!