திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ”சுயேச்சையாக நம்மை ஒடுக்க பார்த்தார்கள். இந்த கும்பல் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து துரோகம் செய்த கும்பல். பொதுமக்கள் அதிமுக கூட்டணிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.