திருநெல்வேலி:தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை போதிய அளவு மழைப் பொழிவு இல்லாமல் இருந்து வந்தது. மேலும் வழக்கத்துக்கு மாறாக ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதுபோன்ற சூழலில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை சற்று தீவிரமடைந்து உள்ளது.
இதனால் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமான மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து. அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க மூன்றாவது நாளாக னத்துறை தடை விதித்து உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளிலும், செங்கல் தேரி பகுதியிலும் தொடர் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதையடுத்து அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.