தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 1, 2022, 6:28 PM IST

ETV Bharat / state

பிளவுபடுகிறதா திமுக-காங்கிரஸ் கூட்டணி?: 'தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இருக்க விரும்புகிறோம்' - நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேட்டி

திருநெல்வேலி மாநகராட்சியில் எட்டு இடங்களில் போட்டியிட கேட்ட நிலையில் மூன்று இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கர பாண்டியன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

நெல்லை காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் பேட்டி
நெல்லை காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் பேட்டி

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ள நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் திமுக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்தநிலையில் இன்று(பிப்.1) மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சங்கரபாண்டியன், "திருநெல்வேலி மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டதை ஏற்க முடியாது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை திமுக தலைமையிடம்பேசி திருநெல்வேலி மாநகராட்சியில் போட்டியிடுவதற்குக்கூடுதல் இடங்களைப் பெற்றுத்தரவேண்டும். மூன்று இடங்களில் போட்டியிட காங்கிரஸ் தயாராக இல்லை.

தலைமை அனுமதித்தால் திருநெல்வேலியில் 36 இடங்களில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவோம். இடப்பங்கீடு குறித்து திமுக-காங்கிரஸ் இடையே ஒரு முறை மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அதன் பின் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. 55 வார்டுகள் உள்ள நிலையில் மூன்று இடங்கள் மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளனர். எட்டு இடங்கள் கேட்டோம் அதுவும் கிடைக்கவில்லை.

நெல்லை காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் பேட்டி

வெள்ளையர்களை வெளியேற்றிய காங்கிரஸ் பேரியக்கம் தன்மானத்தோடும் சுயமரியாதையோடும் இருக்க விரும்புகிறது. குறைவான இடங்களில் போட்டியிட எங்களுக்கு விருப்பமில்லை" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: அத்தனையும் நடிப்பா கோபால்?...பக்கத்து வீட்டில் ரகளை- தற்கொலை நாடகம்..இறுதியில் கைது

ABOUT THE AUTHOR

...view details