தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பரிதாப நிலையில் இருக்கும் தேர்தல் ஆணையம்' - கே.எஸ்.அழகிரி விமர்சனம்! - k.s.alagiri election campaign

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் பரிதாபமான நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாத தோல்வியடைந்த அமைப்பாக உள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

k.s.alagiri

By

Published : Oct 3, 2019, 6:37 PM IST

நாங்குநேரி இடைத்தேர்தல் தொடர்பாக நெல்லையில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வண்ணாரப் பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

பரிதாப நிலையில் தேர்தல் ஆணையம் - கே.எஸ்.அழகிரி

அப்போது, 'தேர்தல் பரப்புரையைத் தொடங்கி விட்டோம். இன்று எங்களது வேட்பாளர் 26 இடங்களில் வாக்கு சேகரிப்பார் என்றும் நாங்குநேரி இடைத்தேர்தலில் 3 கொள்கைகளை முன்வைத்து வாக்கு சேகரிக்க உள்ளோம். இதில், முதலாவதாக 'ஊழல் ஆட்சியை தூக்கி எறிவோம். சாதி, மத மொழியின் பெயரால் அகில இந்திய அளவில் இந்திய மக்களை பிரித்து ஆளும் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு சம்மட்டி அடி கொடுப்போம்.

மூன்றாவதாக தொகுதியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என்ற அடிப்படையில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்போம்' என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

மேலும், 'தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் பரிதாபமாக உள்ளது. தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்பாக இல்லை என்று விமர்சித்த அவர், அதிமுக பணபலத்துடன் அசூர சக்தியோடு உள்ளது. நாங்கள் சத்தியம், இலட்சியம் மீது நம்பிக்கை கொண்டு வெல்வோம்' என்றார்.

இதையும் படிங்க : நெல்லைத் தம்பதியினரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details