திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கக்கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிடக்கோரி வேளாண் பெருமக்களிடமிரந்து கோரிக்கைகள் வந்தது.
வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு
நீர்த்தேக்கங்களிலிருந்து, 2020ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை 151 நாள்களுக்கு 14351.67 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கக்கோரி ஆணையிட்டுள்ளேன்.
மேற்கண்ட கால்வாய் பகுதிகளில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
வேளாண் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.