திருநெல்வேலி வணிகவரி கோட்டம் சார்பில், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் வணிகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியால் தங்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து வணிகர்கள் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். வணிகர்களின் கோரிக்கைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் மூர்த்தி பத்திரிகையாளர்கள் சந்திப்பு அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது, பதினொரு ஆண்டுகளுக்கு பின் வணிகர்களை நேரடியாக அழைத்து ஜிஎஸ்டி தொடர்பான கருத்துக்களை அரசு கேட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 15 ஆயிரம் கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலில் கலந்துக்கொண்ட நிதியமைச்சர் பல்வேறு விதி விலக்குகளை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளார். கரோனோவால் பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தும் பொருள்களின் வரி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்து வரி வதிப்பு பூஜ்ஜியமாகக்கப்படுள்ளது. போலி பில் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். முடிந்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. பெட்ரோல், டீசலை அன்றாடம் ஏழை, எளிய மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். எனவே விலையை குறைக்க முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார். தமிழ்நாட்டு மக்களி உயிர் தான் முக்கியம் என முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்" என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தொடர் போராட்டம் நடத்த இடதுசாரிகள் முடிவு