திருநெல்வேலி: கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 100 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகிறது.
இந்த சூழ்நிலையில் கோடை வெயிலுக்கு இடையே கடந்த இரண்டு நாள்களாக திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மாலை நேரங்களில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் (ஏப்.13) திருநெல்வேலி மாவட்டத்தில் திடீரென பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக, மாவட்டத்தின் நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது.