திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. அந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. இதனை வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் கண்காணிக்கின்றனர் .
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதி திமுக வேட்பாளரும் , நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஆவுடையப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து வாக்கு எண்ணும் மையம் குறித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர் .
வாக்கு எண்ணும் மையம் தொடர்பாக திமுகவினர் ஆட்சியர் புகார் அதில் "சட்டப்பேரவை தேர்தல் முடிந்து 15 தினங்களுக்கு மேல் ஆகும் நிலையில், இதுவரை ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான வாக்குகள் குறித்து வேட்பாளர்களிடம் வழங்கவேண்டிய 17சி படிவம், இதுவரை வழங்கப்படவில்லை. ஆனால் பாதுகாக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்குள் 170 கணினி பொறியியல் வல்லுநர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் நியமிக்கப்பட்டு சென்றுவருவதாக அறிகிறோம் .
இவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகக் கருதுகிறோம் . எனவே வாக்கு எண்ணிக்கை முடியும்வரை இவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ முகவர்கள் தவிர வேறுயாரும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கக் கூடாது, தவறும்பட்சத்தில் தலைமைக்காகத்தின் ஆலோசனைப்படி மேல் நடவடிக்கை எடுப்போம்" எனத் தெரிவித்துள்ளனர் .
இதையும் படிங்க:ஆர்வமாக வாக்கு செலுத்தும் வாக்காளர்கள்: காங்கிரஸ் வேட்பாளர் அசன் மௌலானா