தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேவை குறைபாடுடன் செயல்பட்ட வசந்த் & கோ நிறுவனம் - நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் - Tirunelveli Vasant & Co.

திருநெல்வேலி: பிரபல வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனமான வசந்த் & கோ சேவை குறைபாடுடன் செயல்பட்டதாகக் கூறி நுகர்வோர் நீதிமன்றம் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

வசந்த் & கோ நிறுவனம்
வசந்த் & கோ நிறுவனம்

By

Published : Mar 10, 2020, 7:17 PM IST

Updated : Mar 10, 2020, 11:48 PM IST

திருநெல்வேலி மாவட்டம் முருகன்குறிச்சியில் பிரபல வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யும் நிறுவனமான வசந்த் & கோ செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு நாராயணன் என்பவர் LED டிவி, ஸ்டெபிலைசரையும் 29 ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

அதற்காக நாராயணனுக்கு அந்நிறுவனம் இலவசமாக டிராவல் பேக் ஒன்றை வழங்கியுள்ளது. இதனை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்த நாராயணன் பில்லை பார்க்கும்போது இலவசம் என்று வாங்கி வந்த டிராவல் பேக்கிற்கு அந்நிறுவனம் மறைமுகமாக வசூல் செய்தது தெரியவந்தது.

டிராவல் பேக்கை அவர் அந்நிறுவனத்தில் கொடுத்துவிட்டு பணம் கேட்டதற்கு ஊழியர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நாராயணன் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

அதனடிப்படையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி தேவதாஸ், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு 20 ஆயிரம் ரூபாயை அபராதமாக வழங்கும்படி உத்தரவிட்டார்.

வசந்த் & கோ நிறுவனம்

இதையும் படிங்க: தீபாவளி சீட்டு என கூறி 2 கோடி ரூபாய் மோசடி - அரசுப் பேருந்தை சிறைபிடித்த மக்கள்

Last Updated : Mar 10, 2020, 11:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details