தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை எஸ்பி அதிரடி: பதவி ஏற்ற இரண்டு மாதங்களில் 41 பேர் குண்டர் சட்டத்தில் கைது - குண்டர் சட்டத்தின் கீழ் கைது

திருநெல்வேலி: பதவியேற்ற இரண்டு மாதங்களில் 41 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

By

Published : Sep 30, 2020, 7:39 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக மணிவண்ணன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

குறிப்பாக பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் ரவுடிகள், திருடர்களை கண்காணித்து அவர்கள் மீது நிலுவையிலுள்ள வழக்குகளில் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். அதன்படி அவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ச்சியாக தினமும் பல நபர்கள் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகின்றனர்.

அந்த வகையில் கடந்த மாதத்தில் மட்டும் 19 நபர்கள் மாவட்டம் முழுதும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மணல் திருட்டு, செயின் பறிப்பு, கொலை வழக்கு, பாலியல் குற்றங்கள் உள்பட பல்வேறு வழக்குகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்த நபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 30 நாள்களில் மேலும் 25 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சம் மணல் கடத்தல், செயின் பறிப்பு, திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் மணிவண்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற இரண்டு மாதங்களில் மொத்தம் 41 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பிற்கு குறையில்லாத வகையில் இது போன்ற குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

அதேபோல் காவல் துறை தரப்பிலும் தவறு செய்யும் அலுவலர்கள், பணியாளர்கள் மீது மணிவண்ணன் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அந்த வகையில், மாவட்டத்தில் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த இரண்டு காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட ஏழு காவலர்கள் பணிநீக்கம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details