தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மோடி இல்லைனா அதிமுக காணாமல் போயிருக்கும்" - நெல்லை தமிழ்செல்வன் ஆவேசம்! - Nellai District BJP President Tamilselvan

எடப்பாடி பழனிசாமி சதி செய்து பாஜகவை உடைக்கப் பார்க்கிறார் மோடி இல்லையென்றால் அதிமுக காணாமல் போயிருக்கும் என நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

bjp protest
பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 10, 2023, 9:36 AM IST

மோடி இல்லையென்றால் அதிமுக காணாமல் போயிருக்கும்: தமிழ்செல்வன் ஆவேசம்

திருநெல்வேலி:திசையன் விளை பேரூராட்சி மன்றத்தின் நிர்வாக செயல்பாடுகளைக் கண்டித்து பேரூராட்சி மன்ற அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜக சார்பில் காமராஜர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நெல்லை தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் கூட்டணியில் இருக்கும் போதே அதிமுகவினரால் பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் கூறியதாவது; "அண்ணாமலையின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரித்தால், நாங்களும் விரைவில் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரிப்போம்.

நாங்கள் தேசிய கட்சி எங்கள் கட்சியினுடைய தலைமை, ஆனால் இன்றும் அதிமுகவின் தலைமையுடன் கூட்டணி வைத்துள்ளது. தலைமை கூட்டணி இல்லை என்று இன்றும் அறிவிக்கவில்லை. ஆனாலும் கூட்டணியை விட்டு வெளியே அனுப்புவதற்கான வேலையை அதிமுகவினர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதிமுகவினர் நான்காண்டுக் காலம் ஆட்சி செய்தது பாஜக கட்சியின் ஆதரவாலும் மோடியின் தயவினாலும் தான். மோடி இல்லையென்றால் அதிமுக கட்சியே காணாமல் போயிருக்கும். வளர்த்து விட்டவர்கள் இன்று எங்கள் மார்பில் பாய்கிறார்கள் என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நான்காம் தர ஐந்தாம் தரக் கட்சியாக இருந்த பாஜக அண்ணாமலையின் வருகைக்குப் பிறகு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என்று சொன்ன காரணத்தினாலும், அவர்களும் (அதிமுக) ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிற காரணத்தினால் எங்களை அதிமுக தணித்து விட நினைக்கிறது. நாங்களும் அதற்குத் தயாராகி விட்டோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அகமதாபாத் டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி நிதான ஆட்டம்

ABOUT THE AUTHOR

...view details