திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன.
இதில், பெரும்பாலும் சாதி ரீதியான மோதல்களாகவே இருந்து வருகின்றன. இதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மணிவண்ணன் எஸ்பி, மாவட்டத்தில் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க காவலர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்றும் தனிப்பிரிவு காவலர்கள் ரகசியத் தகவல்களை உடனுக்குடன் எஸ்பி அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், நெல்லை மாவட்டம் முழுவதும் தயாரிக்கப்பட்ட ரவுடிகள் பட்டியல் டிஎஸ்பிகளிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, நெல்லை மாவட்டத்தில் ரவுடிகளை அடியோடு ஒழிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின்பேரில் 5 துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:தாழையூத்து கட்டட ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்!