தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை! - மாஸ்க் அணியாமல் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகளுக்கு கரோனா பரிசோதனை

திருநெல்வேலியில் முகக்கவசம் அணியாமல் பொதுவெளிக்கு சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கரோனா பரிசோதனை செய்ய வைத்து எச்சரித்து அனுப்பினர்.

நெல்லை
நெல்லை

By

Published : Jan 20, 2022, 8:19 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இங்கு நாள்தோறும் 700க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி டவுன் காவல் நிலைய காவல்துறையினர் இன்று (ஜன.20) நெல்லையப்பர் கோயில் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை மடக்கிப் பிடித்து கரோனா பரிசோதனை செய்ய வைத்தனர்.

இதற்காக நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் முன்னதாகவே வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

வாகன ஓட்டிகளிடம் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு இனிமேல் முகக்கவசம் அணியாமல் பொதுவெளிக்கு வரக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

அதேபோல் கேடிசி நகரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியிலும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்தனர்.

இதையும் படிங்க: அதிமுக மாநில விவசாய அணித்தலைவர் டி.ஆர்.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

ABOUT THE AUTHOR

...view details