திருநெல்வேலி:நெல்லை மேலப்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவும், காரும் எதிபாராத விதமாக மோதியது. இது தொடர்பாக 2 வாகனங்களின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் 2 பேரை விலக்கிவிட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து போராட்டம் அப்போது ஏற்பட்ட வாய் தாராறில் மேலப்பாளையம் காவல் நிலைய போலீசார் அந்த இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் பொய்யான புகாரின் அடிப்படையில் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர், ஜமாத் பிரமுகர்கள் ஒன்றிணைந்து நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்யப்பட்ட நபர்கள் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது, அனைத்து கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:Wimbledon: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி வரலாறு படைத்த அல்காரஸ்!
இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்கு சென்ற மேலப்பாளையம் மண்டல சேர்மன், திமுக,உள்ளிட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த 8 கவுன்சிலர்கள் அரசியல் கட்சி மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் என பலர் மீது காவல்துறையை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை ரத்து செய்யக்கோரி காவல்துறை உயர் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து அனைத்து கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெல்லை கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் நெல்லை மேலப்பாளையத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம் அனைத்து அரசியல் கட்சியினர் அனைத்து அமைப்பினர் அனைத்து ஜமாத்துகள் சார்பில் இன்றைய தினம் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது.
இந்த கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்கள், வாடகை கார் ஓட்டுநர்களும் தங்களது வாகனங்களை இயக்கவில்லை. இதன் காரணமாக மேலப்பாளையம் பகுதியில் அத்தியாவசிய பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளது. காவல்துறையினரை கண்டித்து ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:Vande Bharat: போபால் - டெல்லி வந்தே பாரத் ரயிலில் தீ.. அலறியடித்து ஓடிய பயணிகள்!