திருநெல்வேலி: நாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை இன்று (நவ.4) கொண்டாடப்பட்டு வருகிறது. பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்துகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை உடுத்தியும், கோயிலுக்குச் சென்று வழிபட்டும் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
குறிப்பாக 'தல' தீபாவளி கொண்டாடும் புதுமணத்தம்பதிகள் காலை முதல் மிகுந்த உற்சாகத்துடன் புத்தாடை உடுத்தி, தங்க நகைகள் அணிந்து, தங்களது தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். அதாவது புதிதாக திருமணமான தம்பதிகள், திருமணத்திற்குப் பிறகு கொண்டாடும் முதல் தீபாவளியை 'தல' தீபாவளியாக கொண்டாடுவது வழக்கம்.
இதையொட்டி, பெண் வீட்டார் தரப்பில் தனது மகள் மற்றும் மருமகனுக்குத் 'தல' தீபாவளிப் பரிசாக புத்தாடைகள், புது நகைகள், இனிப்புகளைப் பரிசாக கொடுத்து மகிழ்விப்பர்.