நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய் வரையிலான பல்வேறு பணிகள் நடந்துவருகின்றன. இந்தப்பணிகள் குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் பாஸ்கரன் இன்று (அக். 31) ஆய்வு செய்தார்.
நெல்லை புதிய பேருந்து நிலைய அடுக்குமாடி வளாகம் கட்டும் பணி, பொதிகை நகர், திருமால்நகரில் நடக்கும் பூங்கா பணி, மேலப்பாளையம் ஆடு அறுப்பு மையம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய பணி, நேருஜி கலையரங்க கட்டுமான பணி, நெல்லை சந்திப்பில் கட்டப்பட்டுவரும் நவீன அடுக்குமாடி பேருந்து நிலையம், மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள பொருட்காட்சி மைதானத்தில் கட்டப்பட்டுவரும் வர்த்தக மையம், பாதாளசாக்கடை திட்ட பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.