தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலியில் மூட்டையில் இருந்த ஐம்பொன் சிலைகள் - திருநெல்வேலியில் மூட்டையில் இருந்த ஐம்பொன் சிலைகள்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பேருந்து நிலையத்தில் மூட்டையிலிருந்த நான்கு ஐம்பொன்னாலான சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. நாங்குநேரி வருவாய்த் துறையினரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலியில் மூட்டையில் இருந்த  ஐம்பொன் சிலைகள்
திருநெல்வேலியில் மூட்டையில் இருந்த ஐம்பொன் சிலைகள்

By

Published : Jan 31, 2022, 8:58 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் நான்குநேரி பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு இன்று காலையில் நான்குமரியைச் சேர்ந்த ஐயப்பன் (55) என்பவர் சென்றபோது அதன் வாசலில் ஒரு பை இருந்ததைக் கண்டார்.

பின்னர் அந்தப் பையை எடுத்துத் திறந்து பார்த்தபோது அதில் அரை அடி உயரத்தில் நான்கு சாமி சிலைகள் இருப்பதை அறிந்து அந்தப் பையுடன் நாங்குநேரி காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த விவரத்தைத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து காவல் துறையினர் அந்தப் பையைத் திறந்துப் பார்த்ததில் அதில் நான்கு சாமி சிலைகளும், ஒரு சிறிய கத்தியும் இருந்தன. உடனே நாங்குநேரி காவல் ஆய்வாளர் காளியப்பன் தலைமையில் காவலர்கள் அந்தச் சிலைகளையும், கத்தியையும் மீட்டு நாங்குநேரி வட்டம் அலுவலகத்தில் தலைமையிடத்து வட்டாட்சியர் சண்முகவேலிடம் ஒப்படைத்தனர்.

திருநெல்வேலியில் மூட்டையில் இருந்த ஐம்பொன் சிலைகள்

மேலும் இந்தச் சிலை இங்கு எப்படி வந்தது. இது கோயில்களில் திருடப்பட்ட சிலைகளா? என நாங்குநேரி காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களின் நலனுக்காக மின் இணைப்பைத் துண்டிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details