திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “மாவட்டத்தில் முதன்முதலாக கரோனா தொற்று ஏற்பட்ட வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் குணமடைந்து, இன்று வீடு திரும்பியுள்ளார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்தவமனையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு 41 பேர் உள்ளனர்.
இதில் நான்கு பேர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் தென்காசியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாதிக்கப்பட்ட 41 பேரின் குடும்பத்தினர் 171 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் இன்று அல்லது நாளை தெரியவரும் நிலையில், சமூகத் தொற்று நம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளதா என தெரியவரும்” என்று கூறினார்.