இன்று காலை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் எட்டாவது இடம்...! - பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதம்
திருநெல்வேலி: பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் திருநெல்வேலி மாவட்டம் எட்டாவது இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிராபகர் சதீஷ் கூறும்போது, திருநெல்வேலி மாவட்டத்தில் 90 அரசு பள்ளிகளில் உள்ள 12 ஆயிரத்து 807 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 11 ஆயிரத்து 496 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இது மாநில அளவில் எட்டாவது இடம் என புள்ளி விபரம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் 89.8% அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது எனக் கூறிய அவர் கடந்த ஆண்டுகளில் பத்தாவது இடத்திலிருந்த திருநெல்வேலி மாவட்டம் இந்த ஆண்டு 8ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது எனக் கூறினார்.