தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமானியனின் நேர்மைக்கு சபாஷ் - காவல் துணை ஆணையர்!

திருநெல்வேலி: ஏடிஎம்இல் கேட்பாரற்றுகிடந்த பணத்தை காவல் துறையிடம் ஒப்படைத்தவரை பாராட்டி நெல்லை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு துணை ஆணையர் சரவணன் அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

Police Saravanan congratulated the person who returned 15000 rupees

By

Published : Oct 19, 2019, 11:30 PM IST

திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ஒன்றில் முத்துகுமார் என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, இவருக்கு முன்பு பணம் எடுத்த ஒருவர் ரூபாய் 15 ஆயிரத்தை ஏடிஎம்மிலேயே விட்டுச்சென்றுள்ளார்.

இதையறிந்த முத்துகுமார் இன்று மாலை நெல்லை சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு துணை ஆணையர் சரவணனைச் சந்தித்து பணத்தை ஒப்படைத்துள்ளார். மேலும், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, பணத்தை விட்டுச்சென்ற நபரைக் கண்டறிந்து பணத்தை ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறு நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் பணியாற்றும் முத்துகுமாரின் இந்த நேர்மையான செயலை பாராட்ட எண்ணிய துணை ஆணையர் சரவணன் அவரது சமூக வலைதள பக்கங்களில் நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்னும் மூதுரை செய்யுளை மேற்கோள் காட்டியுள்ளார்.

துணை ஆணையர் சரவணன் ட்விட்

அதுமட்டுமின்றி, இன்று என் ஜன்னலுக்கு வெளியே பெய்த மழை முத்துகுமாருக்காக பெய்தது போல் உள்ளதென பெருமிதம் கொண்டார்.

மேலும் படிக்க:அசுரன் பல நாவல்களைப் படமாக்கும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது-காவல் துணை ஆணையர் பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details