தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில், வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கைக்கழுவ வேண்டும் என்ற விழிப்புணர்வை பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைவுப் பகுதிக்கு அருகிலேயே கைக் கழுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் தினந்தோறும் அலுவலகப் பணிக்காக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
திருநெல்வேலியில் கரோனா கட்டுப்பாட்டு அறை திறப்பு! - கரோனா வைரஸ்: 24 மணி நேரம் மருத்துவருடன் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை
திருநெல்வேலி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தொடர்பான மக்கள் அச்சத்தை போக்க 24 மணி நேரம் மருத்துவருடன் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

எனவே, அவர்கள் நலன் கருதி வைக்கப்பட்டுள்ள கைக்கழும் பகுதியினை பார்த்தும் சிலர் அலட்சியமாக செல்கின்றனர். மேலும், ஆட்சியர் வளாகத்தில் உள்ள பேரிடர் கால செயல் மையத்தில் கரோனா வைரஸ் சம்பந்தமான சந்தேகங்கள், உதவிகளுக்கு 24 மணி நேரக்கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.
இந்த மையத்தில் சுகாதார துறை, வருவாய் துறை, மற்றும் அவசர கால செயல் மைய பணியாளர்கள் உள்ளனர். மக்களுக்கு கரோனா அச்சம் தொடர்பாக எழும் சந்தேகங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்- 1077 மற்றும் 0462-2501070 ஆகிய தொலைபேசி எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் - ரஜினி பதிவை நீக்கிய ட்வீட்டர் நிர்வாகம்
TAGGED:
corona control room