தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேருந்து நிலையங்களில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்து 5 குழந்தைகள் மீட்பு! - chid begging

திருநெல்வேலி: பேருந்து நிலையங்களில் பிரச்னை எடுத்துக்கொண்டிருந்து ஐந்து குழந்தைகளை, குழந்தைகள் நல அலுவலர்கள் இன்று காலை மீட்டனர்.

thiruvnelvelli

By

Published : Jun 2, 2019, 8:22 AM IST

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது.

இதனடிப்படையில், மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்குமாறு மாவட்ட குழந்தை நல அலுவலகத்திற்கு உத்தரவிட்டார்.

பிச்சை எடுத்துக்கொண்டிருந்து 5 குழந்தைகள் மீட்பு

இதனைத் தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் தேவானந்த் தலைமையிலான குழுவினர், இன்று காலை பேருந்து நிலையப் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஐந்து குழந்தைகளை மீட்டனர். ஐவரும், அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details