திருநெல்வேலி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவராக பணிபுரிந்தவர் நீதிபதி நீஷ். கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து பரிசோதனை மேற்கொண்டார்.
பரிசோதனையில், நிதிஷுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நீஷ் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (மே.17) நீஷ் உயிரிழந்தார்.
இவர் ஏற்கனவே வள்ளியூர், நாகர்கோயில், சிதம்பரம் ஆகிய நீதிமன்றங்களில் சார்பு நீதிபரதியாக பணிபுரிந்துள்ளார்.
கடந்த 15 நாள்களுக்கு முன்பு தான் நீஷ் திருநெல்வேலி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவராக பொறுப்பேற்றுக் கொண்டார். பதவியேற்ற சில நாள்களிலேயே அவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். நீதிபதி உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள், நீதித்துறை வட்டாரத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்ட தலைமை நீதிபதி கரோனாவால் உயிரிழப்பு திருநெல்வேலியில் தற்போது நாள்தோறும் 600க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நெல்லை அரசு மருத்துவமனையில் தினமும் 20க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அரசு தரப்பில் பத்துக்கும் குறைவானவர்களே உயிரிழப்பதாக கணக்கு காட்டப்படும் சூழ்நிலையில், மாவட்ட தலைமை நீதிபதி ஒருவர் தொற்றால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:‘வட்டார மருத்துவ அலுவலரை இடம் மாற்ற வேண்டும்’: எம்எல்ஏவிடம் பொதுமக்கள் வேண்டுகோள்!