தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் - திருநெல்வேலியில் பாஜக ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம் சிதம்பரபுரம்- யாக்கோபுரம் ஊராட்சியில் 1ஆவது வார்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றத்தலைவர் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் மறுப்பதாக கூறி, மாவட்ட பாஜக தலைவர் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லையில் ஊராட்சி மன்ற தலைவரைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஊராட்சி மன்ற தலைவரைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

By

Published : Mar 3, 2022, 7:27 PM IST

திருநெல்வேலி:வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிதம்பரபுரம் - யாக்கோபுரம் ஊராட்சியில் 1ஆவது வார்டில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் மறுப்பதாகக் கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட பாஜக தலைவர் மகராஜன் தலைமையில் இன்று(மார்ச்.3) ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய மாவட்ட பாஜக தலைவர் மகராஜன் கூறுகையில், "சிதம்பரபுரம்- யாக்கோபுரம் கடந்த 1964ஆம் ஆண்டு முதல் தனி ஊராட்சியாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து சிதம்பரபுரம் 1ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த 210 வாக்காளர்கள் பழவூர் மற்றும் ஆவரைகுளம் ஊராட்சி மன்ற வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

ஆட்சியரிடம் மனு

இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. யாக்கோபுரம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவ சமூகத்தினர் ஊராட்சி மன்றத் தலைவராக வர வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்மையில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தேர்தலில் யாக்கோபுரம் வேட்பாளர் வெற்றி பெற்று பதவியேற்றார்.

நெல்லையில் ஊராட்சி மன்றத் தலைவரைக் கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

தற்போது ஊராட்சி மன்றத் தலைவர் தனது வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் சிதம்பரபுரம் 1ஆவது வார்டு பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரி ரசீதுகள் வழங்குவதைத் தடை செய்தார்.

குடிநீர் குழாய்கள், தெருவிளக்குகள் பராமரிப்பு செய்யாமல் பழிவாங்குகிறார். இதைக் கண்டித்து இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து பேசுவதற்காக எங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு: பொதுப்படையான உத்தரவைப் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details