திருநெல்வேலி:பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகன், பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக இருந்து வந்தார். கடந்த 30 ஆம் தேதி இரவு வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த போது, ஆறு பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல் ஜெகனை சரமாரியாக வெட்டி கொலை விட்டு தப்பிச் சென்றனர். இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே ஜெகன் உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை போலீசார் ஜெகனின் உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜெகன் கொலை தொடர்பாக, பாளையங்கோட்டை சேர்ந்த திமுக பிரமுகர் பிரபு, அவருக்கு உடந்தையாக இருந்த விக்கி உட்பட 12 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் காசி பாண்டியன், கடந்த சில மாதங்கள் முன்பு தான் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு மாறுதலாகி வந்துள்ளார். மூளிக்குளம் பகுதியில் பிரபு திமுகவை பலப்படுத்தி வைத்திருப்பதாகவும் ஜெகன் அதை மாற்றி பாஜகவை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். உயிரிழந்த ஜெகன் மற்றும் திமுக பிரமுகர் பிரபு இடையே பல மாதங்களாக மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. குறிப்பாக இருவரில் யார் முதலில் கொலை செய்வது என திட்டமிட்டு செயல்படும் அளவுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது.