தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... பாஜக வேட்பாளர் பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு - பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: மலைவாழ் மக்கள் பகுதியில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 'நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க' பாட்டு பாடி அவர்களை குதூகலப்படுத்தினார்.

bjp
bjp

By

Published : Apr 1, 2021, 5:28 PM IST

திருநெல்வேலி சட்டப்பேரைவத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நடிகை குஷ்பு ஏற்கனவே தேர்தல் பரப்பு மேற்கொண்டார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 1) நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக திருநெல்வேலி ரயில் நிலையம் அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு

அப்போது நயினார் நாகேந்திரன் "நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க... நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க" என்னும் பாடலை பாடினார். இதை கேட்ட மக்கள் உற்சாகம் அடைந்து நடனமாடினர். இதை அருகில் இருந்த காயத்ரி ரகுராம் சற்று கலக்கத்துடன் புன்னகைத்தப்படி ரசித்துக்கொண்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details