தமிழ்நாடு

tamil nadu

நெல்லை திருமண்டலம் சார்பில் தொடங்கிய தோத்திரப்பண்டிகை!

By

Published : Jul 10, 2019, 12:53 PM IST

திருநெல்வேலி: நெல்லை திருமண்டலம் சார்பில் 239வது வருடாந்திர தோத்திரப்பண்டிகை, ஏழை எளிய மக்களுக்கு யாசகம் வழங்கும் மாம்பழச்சங்க விழா பாளையங்கோட்டையில் நடைபெற்றது.

தோத்திரப்பண்டிகை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நெல்லை திருமண்டலம் சார்பில் ஆண்டுதோறும் மாம்பழச்சங்க விழா மற்றும் தோத்திரப் பண்டிகை வெகு விமரிசையாக நடைபெறும். இந்த விழா உறவுகளை புதுப்பித்துக் கொள்ளும் வகையிலும் , முன்னோர்களை நினைவு கூறும் வகையில் மூன்று நாட்கள் நடைபெறும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 239வது வருடாந்திர தோத்திரப்பண்டிகை மற்றும் மாம்பழச்சங்க விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லையில் தோத்திரப்பண்டிகை

இதனையொட்டி இன்று காலையில் ஏழை எளிய மக்களுக்கு யாசகம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபம், நேருஜி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் குவிந்திருந்த ஏழை எளிய மக்களுக்கு அரிசி, துணி, பணம், உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சில் யாசகம் பெறுவதற்காக ஆயிரக்கணக்கானேர் குவிந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details