திருநெல்வேலி குறுக்குத்துறை பகுதியில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மறைமுகமாக விற்பனை செய்வதாக, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் இன்று (செப்டம்பர் 4) குறுக்குத்துறை பகுதியில் சோதனை நடத்தியபோது, நெல்லை விளாகம் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (23), சுத்தமல்லி பாரதி நகரைச் சேர்ந்த முத்துராமன் (36), பேட்டை ஆசிரியர் காலனியைச் சேர்ந்த லட்சுமணன்(36) ஆகிய மூவர் குறுக்குத்துறை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தல் - 3 பேர் கைது - 3 persons arrested
திருநெல்வேலி: ஆந்திராவில் இருந்து திருநெல்வேலிக்கு கஞ்சா கடத்தி வந்து மறைமுகமாக விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
three persons arrested for smuggling cannabis
இதையடுத்து மூன்று பேரையும் நெல்லை சந்திப்பு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து இரண்டு கிலோ எடையுள்ள கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.