தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்து - இரண்டு கல்லூரி மாணவிகள் உள்பட மூவர் பலி - கல்லூரி மாணவிகள் பலி

ரெட்டியார்பட்டியில் நான்கு வழிச்சாலைகளில் நடந்த விபத்தில் சிக்கி  இரண்டு கல்லூரி மாணவிகள் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

சாலை விபத்து
சாலை விபத்து

By

Published : Dec 4, 2021, 1:02 PM IST

திருநெல்வேலி - மதுரை நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி பகுதி அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் இன்று (டிசம்பர் 4) மோதியது.

இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த மருத்துவக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்துவந்த மாணவிகள் காயத்ரி, பிரிட்டோ ஏஞ்சல் ஆகியோரும், எதிரே காரை ஓட்டிவந்த சண்முகசுந்தரம் என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர்கள் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில், நாகர்கோவிலிருந்து, தூத்துக்குடி நோக்கி சென்ற இந்த காரின் டயர் வெடித்து எதிரில் வந்த இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்கள் மீது மோதியது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க:கார் விபத்து: தாயும் மகனும் உயிரிழப்பு; மீட்கச் சென்றவரும் பலி

ABOUT THE AUTHOR

...view details